மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!! இதன் அறிகுறி மற்றும் குணப்படுத்திக் கொள்ள வழிகள்!!
கோடை காலம் தொடங்கி இரு மாதங்களுக்கும் மேலாகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று ஓவராக தான் இருக்கிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள முடியாமல் கோடை மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.கூடவே பருவகால நோய்களும் வரத் தொடங்கி விட்டது.
ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரீல் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவக் கூடிய ஒன்று.இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் தான் கடிக்கும்.எனவே பகல் நேரங்களில் வீட்டிற்குள் கொசு வராமல் பார்த்துக் கொள்ளவும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
1)தலைவலி
2)உடல் சோர்வு
3)வாந்தி
4)காய்ச்சல்
5)உடலில் சிவப்பு புள்ளிகள்
6)மூட்டு வலி
7)வயிறு வலி
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டால் அவை ஒரு வாரம் வரை நீடிக்கும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் கொசுக்கள் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
கொசுக்கள் கடிக்காமல் இருக்க குழந்தைகளின் உடலில் மருத்துவர்கள் பரிந்துரைத்த க்ரீமைகளை தடவி விடலாம்.
வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளி சாறு,நிலவேம்பு சாறு அருந்த வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.