ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

0
116
Dengue spread at jet speed, the impact intensified in one week!! Warning to public!!

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதாக மருத்துவத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்னும் மழை இருக்கும் எனக் கூறப்பட்ட அறிவிப்பை அடுத்து தேங்கியிருக்கும் மழை தண்ணீரால் கொசுக்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழைத்தண்ணீரில் அதாவது நன்னீரில் பெருகிவரும் கொசுக்களால் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நேற்று கல்லூரி மாணவி உட்பட இரண்டு பேர் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தனர் என அதிர்ச்சி தகவலை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உள்ள 13 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் நாள்தோறும் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் டெங்குவின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருவதால் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதாக இயக்குனர் ஸ்ரீ ராமுலு அதைப்பற்றி கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 16 குழந்தைகள் உட்பட 37 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மாவட்டத்தில் 2 வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.