DMDK DMK: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காதது குறித்து ஸ்டாலின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் நினைவு தினத்தையொட்டி குருபூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைவர்களுக்கும் நேரடியாகவே சென்று அழைப்பு விடுத்து வந்தனர். இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அவர் நினைவு தினத்தையொட்டி 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்குவது என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குருபூஜை தொடங்குவதற்கு முன்பாக ஒரு கிலோ மீட்டர் தூரம் தேமுதிக அலுவலகம் வரை மௌன ஊர்வலம் நடக்க போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் என்பதற்காக அனுமதி வழங்கவில்லை.
மேற்கொண்டு இன்று அனுமதி வழங்குமாறு சாலை மறியல் செய்ததோடு பிரேமலதா தலைமையில் ஜோதி ஏந்தி மவுன ஊர்வலத்தை தொடங்கினர். இதனிடையே முதல்வரிடமும் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி தருமாறு கோரிக்கையும் வைத்தனர். ஆனால் எந்த பக்கமும் இவர்களுக்கு சாதகமாக பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஸ்டாலின் முன் வந்து இதற்கு அனுமதி கொடுத்திருக்கலாமே என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
இதுவே விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத் தலைவராக இருந்த பொழுது 1996 ஆம் ஆண்டு கலைஞருக்கு விழா எடுத்து நடத்தி தங்க பேனாவை பரிசளித்தார். இவற்றையெல்லாம் மறந்து ஸ்டாலின் தனது அதிகாரத் தன்மையை இப்படி காட்டுவது சரிதான என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேற்கொண்டு குருபூஜையில் ஸ்டாலின் கலந்து கொள்ள முடியாததால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்துள்ளார்.
அவரிடம் இது குறித்து கேட்கையில் அனுமதி மீறி ஊர்வலம் நடந்து விட்டது இதனை பெரிதாக்க வேண்டாம் என்று சமாளிக்கும் விதத்தில் பதிலளித்துள்ளார்.