Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் 

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள்

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவருடைய சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் இன்று அவருடைய சொந்த ஊர் சேலம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவாக்கவுண்டனுார் பைபாஸில், மாநகர் மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் சார்பில், ஜெ., பேரவை செயலர் சரவணமணி, நேற்று காலை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார். அதில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ளவும், மேடை அமைக்கவும் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி எனக்கூறி காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

Exit mobile version