ஒருவரை கூட விடக்கூடாது உடனே போன் போடுங்க! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

0
162

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டுவரப்பட்டதே அதற்காகத்தான்.

அதன் பிறகு தான் பசியாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது இவை அனைத்தும் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகத்தான்.

குறிப்பாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் திட்டமும் மாணவியர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது.

ஆனாலும் இவ்வாறு பல திட்டங்கள் கொண்டு வந்தாலும் மாணவ, மாணவியர் பலர் பள்ளி கல்வியை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

வறுமை, குடும்ப சூழ்நிலை, ஆர்வமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பல மாணவ, மாணவியர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை உண்டாகியுள்ளது.

தேசிய அளவில் உயர் கல்வியின் தமிழ்நாடு தான் முதலிடத்திலிருக்கிறது. தமிழகத்தில் உயர்கல்வி சதவீதம் 52 சதவீதமாக இருக்கிறது. அதோடு இதுதான் தேசிய அளவில் அதிகம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பல முன்னேறிய நாடுகளை விட நாம் உயர் கல்வியில் உயர்ந்த நிலையில் இருக்கிறோம். இந்த நிலையில் தான் தமிழகத்தில் மேலும் உயர் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமலிருக்கும் மாணவர்களை கண்டறியும் திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

இவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களை கல்லூரி செல்வதற்கு தயார்படுத்தும் திட்டம் தற்போது செயலுக்கு வந்துள்ளது.

இதற்காக நாட்டில் இதுவரையில் பள்ளிக் கல்வித் துறையில் பிறப்பிக்கப்படாத மிக முக்கியமான உத்தரவு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் பிறப்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இந்த வருடம் உயர்கல்வி படிப்பை தொடர்ந்துள்ளார்களா? என்பதை அறிய இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்படி உயர்கல்வி படிப்பை தொடராமல் மாணவர்கள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். மேலும் அதனை களைந்து அவர்கள் உயர் கல்வியை தொடர தேவைப்படும் வழிகாட்டுதல்களை வழங்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எந்தவிதமான உயர்கல்விக்கும் விண்ணப்பம் செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு சரியான உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை மாநில திட்டத்தில் இருந்து வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைபேசி எண் போன்ற விடுபட்ட தகவல்களை பள்ளியிலிருந்து பெறவுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று சரியான படிவத்தில் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக மாணவர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பெறப்பட்டு அதனை உடனடியாக அரசுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அந்த மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களுக்கு முறையான மேல் படிப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதன் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.