Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இலங்கை போராட்டக்குழுவினர் இடையே கூலிப்படைகளை களமிறங்கினாரா ராஜபக்சே? விரைவில் கைதாகிறார்!

இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால் அந்த நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் பெட்ரோலிய பொருட்கள் என்று அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்தனர். அதோடு இலங்கை அரசாங்கமும் தற்சமயம் திவாலான நிலைக்கு சென்றிருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலை இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக, ஆத்திரமுற்ற இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார்கள். இதன் காரணமாக, ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று ராஜினாமா செய்துவிட்டு சென்றதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

அவர் பிரதமராக மட்டும் தற்போது பதவி வகிக்கவில்லை, மாறாக இலங்கை அரசின் நிதி அமைச்சராகவும், அவரை திகழ்ந்து வருகிறார்.

ஆகவே இப்படியான பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், அவர் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பார்? என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்று நோக்கி வருகிறது.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிவதற்கு முன்பாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலிப்படைகளை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

ஆனாலும் அன்றிரவு இலங்கை போர்க்களமாக காட்சியளித்தது. நாடு முழுவதும் ஆளும் கட்சி சார்ந்த 78 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ச தன்னுடைய குடும்பத்துடன் தப்பி சென்று தலைமறைவானார்.

இந்த சூழ்நிலையில், கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து இலங்கையில் போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த வன்முறைத் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள இலங்கை காவல்துறையினர் வன்முறை தூண்டிவிட்டது.

யார்? என்பது தொடர்பாக ஏற்கனவே பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள் என தெரிகிறது.

இவ்வாறான நிலையில், இந்த தாக்குதல் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது.

தற்சமயம் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியை சமாளிப்பதற்காக அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை குறித்து மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ஷவிடம் ஏற்கனவே காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

Exit mobile version