145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 3 பெண்கள் உள்பட 145 இந்தியர்களை அமெரிக்க அரசு கை கால்களை கட்டி டெல்லிக்கு திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிவந்த 145 இந்தியர்கள் கண்டுபிடித்த அமெரிக்க அரசு அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கை கால்கள் கட்டப்பட்டு புலம்பெயர் மையத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதும் இவர்களில் மூவர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கை கால்கள் கட்டப்பட்டு வெளியேற்றியுள்ளதற்கு இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது
இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இதே போல் கை கால்கள் கட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாகத்தான் பெரும்பாலானோர் ஊடுருவுவதாகவும், இதற்கு மெக்சிகோ அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குச் இருமடங்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது