சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 80 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தற்போதுவரை நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதன் காரணமாக பல பகுதிகளில் காற்று வேகமாக வீசி வருகிறது. இதை வேடிக்கை பார்க்கவே மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டு வருகின்றனர். அரசு அறிவிப்பை மீறி மக்கள் அங்கு நின்று வேடிக்கை பார்த்து வருவது அவர்களுக்குத்தான் பேராபத்தாக முடியும்.