Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலை அவமதித்தது குறித்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள பெரியார் சிலை ஒன்ருக்கு காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அறிவிக்கப்பட்டதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மேலும் ,இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,சமூக நீதிக்காக பாடுபட்டு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்திருக்கும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1310087273812123648?s=20

மேலும், இந்த குற்றச்செயலுக்கு ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது அதிமுக அரசு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version