சட்டப்பேரவையில் பேசும் பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மேலும் விரிவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறார்.
சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை குடும்ப அட்டைதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே செயல்பட்டு வரும் விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்து இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என கூறப்பட்டவர்களும் புதிதாக சேர விரும்பும் பயனாளிகளும் மீண்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இன்னும் மூன்று மாத காலங்களில் மகளிர் உரிமை தொகை திட்டமானது விரிவு படுத்தப்பட்டு விடும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பு :-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக பயன்பெற நினைப்பவர்கள் தங்களது அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்க கூடியவர்களிடம் கட்டாயமாக அரிசி ரேஷன் அட்டை ஆதார் கார்டு குடும்ப வருமான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.