Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை! டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் டெல்லியில சமீபத்தில் மதுபான ஆயத்தீர்வை குறித்த சில சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் மதுபான தயாரிப்பாளர்கள் மது பார் நடத்துதல் மது கடைகள் உரிமம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பலனடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

சிபிஐ விசாரிப்பதற்கு ஆளுநர் பரிந்துரை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது, இதை தொடர்பாக சென்ற சில வாரங்களுக்கு முன்னர் காவல் துறை அதிகாரிகள் பலர் பணியினை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மனிஷ் சிசோடியா வீடு மற்றும் துறை சார்ந்த சில அதிகாரிகள், வீடு அலுவலகங்கள், என 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த அதிரடி சோதனையின் மூலமாக சிபிஐ எந்தவிதமான பலனும் அடையப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது இது அரசியல் உள்நோக்கம் கொண்டது, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியை உண்டாக்கியவர் மனீஷ் சிசோடியா.

ஆனாலும் அவர் நாட்டுக்கு நல்லது செய்வதால் அவர் மீது சிலர் குறி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய நாட்டுப் பணி தொடரும், யாரும் நிறுத்த முடியாது. சிபிஐக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version