சமீபத்தில் திமுக கட்சியை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார் அக்கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழிலரசன். ஏற்கனவே தம்மைக் கட்சிய விட்டு விலக்க கோரிக்கை வைத்தும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்சமயம் தாமாக விலகிக் கொண்டுள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்து உள்ளார். அவர் விலகுவதாக பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் இந்தக் கட்சியை விட்டு நான்காம் தேதி வெளிநடப்பு செய்து கொள்கிறேன். சேலம் மாவட்ட பிரதிநிதி மற்றும் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்பிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் கட்சி ஒரு சமூகத்தை மட்டும் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மூத்த உறுப்பினர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும், இவர்கள் குடும்ப அரசியல் மூலம் பேரனுக்கு பேனர் வைக்கும் காலம் வெகு நாட்களில்லை. இந்தக் குடும்ப அரசியலுக்கு நான் தயாராக இல்லை. இதுவரை ஒத்துழைப்பு அழைத்த அனைத்து சக உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 9,2024 நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு மனஸ்தாவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக தன்னை கட்சியிலிட்டு நீக்குமாறு ஏற்கனவே சேலம் பகுதி ராஜேந்திரன் அவர்களிடம் விருப்பம் தெரிவித்திருந்தோம். ஆனால் கட்சி மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. சேலத்தில் ஒரு சமூகம் சார்ந்த கட்சியாக திமுக மாறி உள்ளது.
சமூக நீதி என்பது ஒரு வாய்ப்பேச்சாகவே காணப்படுகின்றது என்ற பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும், செய்தியாளர்களுக்கு இடம் அவர் பேசுகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல்வேறு கட்சி பொறுப்புகளை செய்துள்ளேன். கட்சியில் பல பிரச்சினைகள் நிலவுவதை குறித்து புகார் கொடுத்தும் பயனில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் இருப்பினும் உதயநிதி இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று துணை முதலமைச்சர் ஆகி உள்ளார். மூத்த கட்சிக்காரர்களுக்கு எந்தவித மரியாதையும் அளிப்பது இல்லை. தற்சமயம் இன்பநிதியை கட்சி பரவசமாக முன்னிறுத்தி வருகிறது. இச்சம்பவம் எனக்கு வேதனை அளித்தது. என்னை போல் பலரும் கூடிய விரைவில் கட்சியை விட்டு விலகுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.