Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அங்கன்வாடி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு 

அங்கன்வாடி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு

அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மாநில அரசு, யூனியன் பிரதேசங்களால் அமைக்கப்பட்ட குழுவால் உள்ளூர் கிராமத்திலிருந்து விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட தகுதி மெட்ரிகுலேஷன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள்  பணிக்கு வயது வரம்பு 18-35 ஆண்டுகள் ஆகும்.

அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கெளரவப் பணியாளர்களாக இருப்பதால், அரசாங்கத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் மாதாந்திர கவுரவ ஊதியம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

முக்கிய அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்களுக்கு மாதம் ₹ 4,500/- கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது; குறு அங்கன்வாடிகளில் பணியாளர்கள் மாதத்திற்கு ₹3,500/- மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ₹2,250/- வழங்கப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதத்திற்கு ₹ 250/- பணியாளர்களுக்கு மாதம் ₹.500 செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

கூடுதலாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த செயல்பாட்டாளர்களுக்கு தங்கள் சொந்த ஆதாரங்களில்  இருந்து கூடுதல் பண ஊக்கத்தொகை, கௌரவ ஊதியம் வழங்குகின்றன. தற்போது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.

இந்தத் தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

Exit mobile version