மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் கொண்ட டீடாக்ஸ் டீ!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

Photo of author

By Divya

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட சீரகம்,பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை கொண்டு டீடாக்ஸ் பானம் தாயரித்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)ஜீரா – ஒரு தேக்கரண்டி
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
4)எலுமிச்சை – ஒன்று

பயன்படுத்தும் முறை:

முதல் செய்முறை:

ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலி ஒன்றில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.சீரகத்தை கருகிடாமல் பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவிட வேண்டும்.

இரண்டாவது செய்முறை:

பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் அதாவது சோம்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பெருஞ்சீரகத்தை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சீரகத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது செய்முறை:

அடுத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.வறுத்த சீரகம்,பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி விதையை நன்கு ஆறவைக்க வேண்டும்.

நான்காவது செய்முறை:

பிறகு இந்த மூன்று பொருளையும் மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவது செய்முறை:

பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

ஆறாவது செய்முறை:

தண்ணீர் சிறிது சூடானதும் அரைத்து வைத்துள்ள சீரகம்,கொத்தமல்லி,பெருஞ்சீரகப் பொடியை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

ஏழாவது செய்முறை:

ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

எட்டாவது செய்முறை:

பின்னர் இந்த பானத்தை சில நிமிடங்கள் ஆறவைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தூயத் தேனை இந்த பானத்தில் ஊற்றி ஸ்பூன் கொண்டு நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பருகி வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இந்த பானத்திற்கு உண்டு.உடலுக்கு போதிய இம்யூனிட்டி பவரை இந்த பானம் வழங்குகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு பிடிப்பு,வயிற்று வலி போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.இந்த பானத்தை குடித்தால் வாயுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

Exit mobile version