Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகள் மிகவும் சிதைந்து போய் உள்ளன.

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும் அதிகாலை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டி உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் மேலும் கட்டிடத்தின் இடிப்பாடுகளில் சிக்கியுள்ளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவிலும் இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் மூன்றாவது 6.0 ரிக்டர்  அளவிலும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிப்பாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் துருக்கி அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கி அரசுக்கு இந்திய அரசு இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்பி உள்ளது. இதனுடன் மோப்பநாய் படையையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. இவைகள் உத்திரபிரதேச மாநிலம் காசிபாத்தில் இருந்து புறப்பட்டு துருக்கி நோக்கி புறப்பட்டு விட்டன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்புத்துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட உயர்மட்ட செயலாளர்கள் கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இதனுடன் மருத்துவர்கள், மருந்து பொருட்கள், செவிலியர்கள், நிவாரண பொருட்கள், உள்ளிட்ட உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இந்த நிவாரண பொருட்கள் அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version