TN Government: நம் தமிழக அரசு கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அந்த நிலையில் தற்போது கிராமப்புற முன்னேற்றத்தில் இந்திய அளவில் வழிகாட்டும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், மின்கலன்கள் என தேவையான அனைத்தும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்டறிய “நம்ம கிராம சபை” என்ற புதிய கைபேசி செயலி அறிமுகம் செய்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் கிராம மக்களுக்கு ஊரக வீடு வழங்கும் திட்டம், மற்றும் கலைனரின் கனவு இல்லம் என பல திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. மேலும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு “பைக் ஆம்புலன்ஸ்” என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் போன்ற அம்சங்களை செயல்படுத்தியது.
அது மட்டும் அல்லாமல் “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” என்ற திட்டத்தின் மூலம் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் “நமக்கு நாமே” என்ற திட்டத்தின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் மற்றும் கதிரடிக்கும் களம், பேருந்து நிழற்குடை என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.