இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

0
224
#image_title

 இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

மகா சிவராத்திரி முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு  பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்  சிவன் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000  மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பிரதோஷ நாட்களில் அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். எனவே மாதந்தோறும் இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட 4  நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த மலைக் கோயிலுக்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு வருகின்ற 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு செல்ல காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை. உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

மகா சிவராத்திரி அன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் மலைக்குச் செல்லும் பாதை, கோவில் அடிவாரம், கோவில், உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி விழா என்பதால்  விசேஷ பூஜை இரவு அன்று நடைபெறுவது சிறப்பாக கருதப்படுகிறது.