சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தமிழ் மாத பிறப்பின் போது நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். இதன்படி ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களுக்கு பூஜை நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட இருந்தது.
ஆனால் தற்போது சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் கேரளாவில் பெய்து வரும் கனமழை. கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் 19ஆம் தேதி வரை மழை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.