சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு!

0
123
Devotees celebrate Swami Iyappan! Sabarimala Ayyappan temple walk opens for Adimath special puja

சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுவாமி சபரிமலை ஐயப்பனின் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜைக்காக 16 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு,ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போன்ற சுவாமிகள் நடைத்திறந்து வைக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து 21ஆம் தேதி வரை ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் ஐயப்பனின் கோவிலில் நடைபெறும். பூஜைகள் 5 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம்,கணபதி ஹோமம்,உஷ பூஜை போன்ற பூஜைகள் நடக்கும்.இதன் பின்னர் உச்ச பூஜைக்குப் பின்பு மதியம் 1 மணி அளவில் நடை அடைக்கப்படும்,அதன் பிறகு மாலை 5 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை அபிஷேகம் நடக்கும்.

பின்பு இரவு 8.30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனாக் கட்டுப்பாட்டின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சபரிமலையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி ஐயப்பனின் தரிசனத்திற்கு 17 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி ஆர் என்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பு ஊசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாகக் கொண்டு வரப்பட வேண்டும்.இந்தச் சான்றிதழ் அல்லாத பக்தகோடிகள் தரிசனத்திற்கு கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவச் சான்றிதழ் மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.