திருப்பதிக்கு செல்லும் பக்தர்களே.. இதை மிஸ் பண்ணிடாதீங்க! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க தேவஸ்த்தானம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஏழுமலையானை தரிசிக்க அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் விநியோகத்தை தேவஸ்த்தானம் இன்று தொடங்கியிருக்கிறது.பக்கதர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் மேற்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி சுப்ரபாதம் அர்ச்சனை,தோமாலை,கல்யாணோத்சவம்,ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விநியோகம் இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது.இதில் பக்தர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொகை செலுத்தி சாமி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.சாமி தரிசம் மேற்கொள்ள விரும்புவோர் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.