பாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

0
131

பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முகநூல் பக்கத்தில் இருந்த பழனி திரு ஆவினன்குடி கோவிலின் மூலவர் படத்தை பாஜகவினர் அகற்றி இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா சார்பாக சென்ற 23ஆம் தேதி யாத்திரை நடைபெற்றது. தொற்று கால சமூக இடைவெளி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது பாஜகவினர் கூட்டமாக போனது ஆகியவை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதோடு பாஜகவினர் கொண்டு வந்த வேலை மலைகோவில் திருஆவினன்குடி கோவிலில் இருக்கின்ற கருவறையில் வைத்து வழிபாடு செய்யுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள் ஆனால் அதை கோவில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் முருகன் கருவறையை நோக்கி சாமி தரிசனம் செய்வது போல ஒரு படத்தை பாஜகவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது அந்த படத்தில் திரு ஆவினன்குடி மூலவர் சிலையின் உருவம் பதிவாகி இருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. ஆகவே இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக முதல்வர், அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது அதன் எதிரொலியாக அந்த கட்சியினர் தங்களுடைய முகநூல் பக்கத்தில் வைத்திருந்த முருகன் மூலவர் படத்தை அகற்றி இருக்கிறார்கள்.