உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!

0
427
#image_title

உலகிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர் ஓடும் சாலைகளை செப்பனிட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் 480 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நெல்லையப்பர் திருக்கோவில் நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து சேரும் 28 அடி நீள அகலம் கொண்ட இந்த தேரின் மொத்த எடை 480 டன் தேரை தாங்கி நிற்கும் 4 இரும்பு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றை டன் எடை கொண்டதாகும்.

தேரை வடம் பிடித்து இழுக்க முன்னுர அடி நீளத்தில் பிரம்மாண்டமான நான்கு வடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

தேரின் மொத்த உயரம் 90 அடி ஆகும் முழுக்க முழுக்க தேக்கு மற்றும் கொங்கு மரத்திலான மரத்தூண்களை பயன்படுத்தப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டு தேர் திருவிழாவின் போது வீதி உலா வரும்.

தேரின் மேல் உச்சியில் இருக்கும் கலசம் வைக்கும் இடம் மட்டும் 900 கிலோ எடையை ஆகும். உலகிலேயே மிகப்பெரிய தேராக இருக்கும். திருவாரூர் ஆழி தேர் 380 டன் எடையும் 96 அடி உயரமும் கொண்டதாகவும் இரண்டாவது பெரிய தேர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் 350 டன் எடையும் 95 அடி உயரும் கொண்டதாகும்.

உலகின் அதிக எடையும் பிரம்மாண்டமும் கொண்ட தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்பட்டு நிலையம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு வருகிறது.திருவாரூர் மற்றும் திருவில்லிப்புத்தூர் தேர் ஹிட்டாச்சி போன்ற பிரம்மாண்ட இயந்திரங்கள் கொண்டு இழுக்கப்படுகிறது.

500 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் நடைபெறும் தேர்த்திருவிழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் தேரோடும் நான்கு ரத வீதிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக பணிகள் நடைபெற்று குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.

சாலைகள் முழுதும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வரும் சூழலில் இன்னும் இரண்டு மாதங்களில் தேர் திருவிழா நடைபெறுவதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளை செப்பனிட்டு தேர் தடையின்றி நான்கு ரதவிதிகளிலும் வலம் வருவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.