Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா சிகிச்சைக்கு பயனளிக்கும் டெக்ஸாமெதசோன் மருந்து

கொரோனா தொற்று பரவலின் ஆரம்பகட்டத்தில் இருந்து பல்வேறு நாடுகள் இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.பல்வேறு மருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதில் ஹைட்ராக்ஸிக் கிலோராக்குயின் என்ற மலேரியா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா தொற்றுக்கு இ பயனளிப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில் எதிர்பார்த்த அளவு இந்த மருந்த பயனளிக்கவில்லை.பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருந்துகளை கொண்டு உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக தொடர் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் இறங்கினர்.

இந்த ஆராய்ச்சியில் வெற்றி காணும் வகையில் டெக்ஸாமெதசோன் ( dexamathasone)என்ற மருந்து கொரோனா நோயாளிகளை மூன்றில் ஒரு பங்கு உயிரை காக்கின்ற அளவிற்கு பயனளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப் பட்ட 20 நோயாளிகளுக்கு இம் மருந்து மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமலேயே 19 பேர்கள் குணமடைந்தனர்.

மேலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இந்நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கும் இந்த மருந்து வைரஸின் வீரியத்தை குறைந்து உயிர் இழப்பை குறைப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சுமார் இரண்டாயிரம் நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது.இவர்களை இந்த மருந்து தராத சுமார் 4000 நோயாளிகளுடன்
ஒப்பிடப்பட்டன. இந்த மருந்து வாய் வழியாகவோ அல்லது நரம்பு மூலமாகவும் செலுத்தப்பட்டது.

சுவாசக் கருவியின் உதவியில் இருந்த நோயாளிகளுக்கு மருந்தை அளித்த பின்னர் 40 இல் இருந்து 28 சதவீதமாக அவர்களின் உயிரிழப்பு குறைந்தது.அதேபோன்று ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்த நோயாளிகளுக்கு இம் மருந்தை அளித்த பின்னர் இறப்பு சதவீதம் 25 லிருந்து 20 ஆக குறைந்தது என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவப் பேராசிரியர் பீட்டர் ஹார்பி கூறுகையில் கொரோனா தொற்றுக்கு இந்த மருந்து ஒன்றே இறப்பு விகிதத்தை குறைப்பதில் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வென்டிலேட்டர் களில் வாழும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கும்போது இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்து உள்ளதாகவும், மேலும் ஆக்ஸிஜன் உதவியுடன் நோயாளிகளின் இறப்பு வீதம் ஐந்தில் ஒரு பங்கு என்றும் கூறுகின்றனர்.

Exit mobile version