Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! 

Dhangarbachan explains about cashew fruit

Dhangarbachan explains about cashew fruit

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!!

நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடு தான் கிளி ஜோசியம் பார்த்த வரை கைது செய்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம்.

தமிழகத்தில்  பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது ஜோசியம் பார்த்தது தவறு என்று அவரை கைது செய்தது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முந்திரி பழம் குறித்தும் அதில் உள்ள மகத்துவத்தை பற்றியும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு ஆளும் கட்சியையும் சாடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, முந்திரி பழம் மிகவும் உடலுக்கு நல்லது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை உலக நாடுகள் மருந்தாகவும் பானமாவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை இங்கு உள்ளவர்கள் தூக்கி எறிகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அறிவே இல்லை. இதற்கென்று ஒரு ஆலை தொடங்கி நமது பொருளாதாரத்தை உயர்த்தலாம். கட்சியில் அவரவர்களின் தேவைக்கேற்ப சாராய தொழிற்சாலையை உருவாக்கி பெண்களின் தாலியை தான் அறுக்கின்றனர் என்று ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் எங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். அந்த சாராய ஆலை எங்கள் ஊரில் வராமலிருக்க நான் பெரிதும் பாடுபட்டேன். அதுமட்டுமின்றி கடலூரில் தான் அதிக குடிசைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வரலாம்.

பண்ருட்டி விருதாச்சலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த முந்திரி பழம் அதிக விளைவதாகவும் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளதால் இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வந்தால் பொருளாதார ரீதியில் முன்னேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version