Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

Dhanteras - Diwali History in Tamil

Dhanteras - Diwali History in Tamil

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

Dhanteras (தந்தேரஸ்)

தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஸ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 23 – ஆம் தேதி முதல் தந்தேரஸ் பண்டிகை வாடா இந்தியாவில் ஆரம்பிக்கிறது . அதேபோல தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று அனைவருமே வீட்டில் கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இந்த தந்தேரஸ் தினத்தன்று அவரவர் வீட்டிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை இந்த பூஜைக்கு முன்பாக வைத்து நாம் விளக்கேற்றி வழிபட்டால் மேலும் பலமடங்காக செல்வம் பெருகும் என்பது ஐதீகம். வட இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த தந்தேரஸ் திருவிழா நடப்பாண்டில் வரும் அக்டோபர் 23 – ஆம் தேதி வருகிறது. இந்த திருவிழாவை பெரும்பாலும் வட இந்தியாவில் தான் அதிக அளவில் கொண்டாடுவார்கள்.

Confused when is Dhanteras 2022? Let us tell you - India Today

இந்த தந்தேரஸ் தின நாளில் ஆயுர்வேதத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் தந்வேந்திரியை வழிபடுவார்கள். இதனால் நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம். வட இந்தியாவில் செய்யப்படும் இந்த வழிபாட்டின் அடையாளமாக தான் தென்னிந்தியாவில் தீபாவளிக்கு முந்தைய நாள் மருந்து அல்லது ஏதாவது ஒரு லேகியம் செய்து கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தந்தேரஸ் திருவிழாவின் போது எதற்காக வீடுகளில் விளக்கேற்றப்படுகிறது என்பது குறித்த புராண தகவலையும் தற்போது பார்க்கலாம். அதாவது சாவித்திரி தன்னுடைய கணவன் சத்தியவானை எமனிடம் இருந்து போராடி மீட்டார் என்று கூறுவது போன்று தான் இந்த கதையும் இருக்கிறது.

அதாவது ஹிமா என்ற மன்னன் திருமணம் நடந்த நான்கு நாட்களில் இறந்து விடுவார் என்ற சாபத்தை பெறுகிறார். ‌ இதனையடுத்து மன்னர் ஹிமாவுக்கு திருமணமாகி நான்கு நாட்கள் ஆகிறது. அன்றைய தினம் ஹிமாவின் மனைவி அரண்மனை முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களால் குவித்து வைக்கிறார்.

இத்துடன் அரண்மனை முழுவதும் ஜொலிக்கும் வகையில் விளக்குகளையும் ஏற்றி வைக்கிறார். அந்த சமயத்தில் எமன் பாம்பு வடிவத்தில் ஹிமாவின் உயிரை பறிப்பதற்காக வருகிறார். ஆனால் வீடு முழுவதும் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் குவியல் மற்றும் தீபத்தின் வெளிச்சத்தின் காரணமாக பாம்புக்கு கண் கூசி அப்படியே ஒரு ஓரமாக இருந்து விடுகிறது.

அதன் பிறகு இரவு நேரத்தில் மன்னர் ஹிமா பாடிய பாடல்களை கேட்டு அந்த பாம்பு மெய்மறந்து தூங்கி விடுகிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் காலை மனம் குளிர்ந்த பாம்பு மன்னர் ஹிமாவை கொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறது.

இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாகத்தான் தந்தேரஸ் தினத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வீட்டில் வைத்து பூஜை செய்வதோடு, கூடவே விளக்குகளையும் ஏற்றுகிறார்கள். மேலும் இந்த திருநாளன்று வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வைத்து பூஜை செய்வதோடு அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

Exit mobile version