Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லதா ரஜினிகாந்த் இப்படிபட்ட குணம் கொண்டவரா? தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இவர்தானா?

Latha Rajinikanth with her daughters Aishwarya and Soundarya

கோலிவுட்டின் சிறந்த தம்பதிகளில் ஒருவர் தான் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு தினம் ஒரு காரணங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு லதா ரஜினிகாந்தின் குணமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

‘தில்லு முல்லு’ திரைப்படத்தின் பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரஜினிகாந்தின் உறவினர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகின்றனர். திருமணம் புதிதில் இருந்தே லதா, ரஜினிகாந்தின் உறவினர்கள் யாரையும் அருகில் சேர்த்து கொள்வதில்லை என்றும், அவர்கள் ரஜினியை சந்திக்க வீட்டிற்கு வர நேரிட்டாலும் லதா அவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவரது உறவினர்களை மட்டும் ரஜினியின் புகழை வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மறுபக்கம் தனுஷ், தனது அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவர்களின் மீதும் அதீத பாசம் கொண்டவர். அவரது மொத்த குடும்பத்திற்கும் இவர் செலவு செய்வதாகவும் சொல்கிறார்கள். இதனை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனுஷ் குடும்பத்துடன் நல்லுறவாகவே இருந்து இருக்கிறார். இருந்தாலும் லதா ரஜினிகாந்த் இதை பெரிய பிரச்சனை ஆக்கவே இருவருக்கும் விவாகரத்து வரை சென்று இருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version