Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புது வீட்டில் மீண்டும் ஒன்றாக வாழப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி!

புது வீட்டில் மீண்டும் ஒன்றாக வாழப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி!

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மண வாழ்ககையில் இருந்து பிரிந்து விவாகரத்து செய்யப் போதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா உலகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதுபற்றி பேசிய தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ‘அவர்கள் சமாதானமாகி மீண்டும் ஒன்றிணைவார்கள்’ என அப்போது கூறியிருந்தார். தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்வதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் அப்போது தகவல்கள் பரவின.

இருவருமே தங்களுடைய திரைப்பணியில் பிஸியாக இருந்தனர். ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். அதேபோல் தனுஷும் நானே வருவேன் ,வாத்தி ,திருச்சிற்றம்பலம், என படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையே அவர்கள் மகன் யாத்ராவின் பள்ளி விழா ஒன்றில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். அப்போது வெளியானப் புகைப்படம் வைரல் ஆனது. இந்நிலையில் இப்போது இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாக இந்த தகவல் சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டிவரும் புதிய வீட்டின் பணிகள் முடிந்ததும் இருவரும் அந்த வீட்டில் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்ற தகவலும் இப்போது பரவி வருகிறது.

Exit mobile version