தனுஷ் நடிப்பில் ‘ராக்கி’ இயக்குனரின் அடுத்த படம் ‘கேப்டன் மில்லர்’… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

0
150

 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

ஹாலிவுட்டில் உருவாகும் தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ். அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.