Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது 10வது முறையாக நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் இந்த தேதியில் கண்டிப்பாக படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமிட் ஆன முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்னரே அவர் நடித்த ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும் இந்த படத்தில் சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Exit mobile version