Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் அந்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது

‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்தியை சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது

‘சில்புரோ’ என்ற பாடல் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலாக நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும், இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார் என்ற செய்தி இப்பொழுதுதான் வெளிவந்திருப்பது தனுஷ் ரசிகர்கள் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது

தனுஷ் குரலில் வெளிவரவிருக்கும் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version