Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் பிரிவது உறுதி!! குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது என்ன!!

Dhanush is sure to break up over Aishwarya's issue!! What happened in the family welfare court!!

Dhanush is sure to break up over Aishwarya's issue!! What happened in the family welfare court!!

Cinema: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர்களின் மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை.

அதனால் வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த வழக்கு இன்று நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்ததால் தனுஷ்-ஐஸ்வர்யா ஆஜராகினர். அதில் அவர்களுக்கு ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இன்று நடந்த வழக்கில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் மிக உறுதியாக இருகின்றனர் என விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 27-ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version