‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

0
187

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

தனுஷுக்காக இந்த படத்தைப் பார்க்க இந்திய சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவருக்கு படத்தில் மொத்தமே 2 காட்சிகள்தான். நான்கு வசனங்கள்தான். ஆனால் இந்தியா முழுவதும் அவரை முன்னிலைப்படுத்தி மார்க்கெட்டிங் செய்து ரசிகர்களை ஏமாற்றினர்.

இந்நிலையில் படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர். முந்தைய பாகத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்கள் இந்த படத்தில் நடிப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் கதாநாயகியான அனா டி ஆர்மாஸ் இருக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த தகவலை தற்போது தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது சமீபத்தைய ட்விட்டர் பதிவில் “தி க்ரே மேன் உலகம் விரிவடைகிறது. லோன் வொல்ஃப் (படத்தில் தனுஷின் கதாபாத்திரம்) தயார். நீங்கள் தயாரா?’ எனக் கூறியுள்ளார். முன்னதாக ரஸ்ஸோ சகோதரர்கள் தனுஷ் கதாபாத்திரத்தை விரிவாக்கி ஒரு கதை செய்யும் யோசனை உள்ளதாகக் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.