Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

#image_title

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.
தமிழ் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் கவர்ந்துள்ள ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான். இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி கொண்டு நடித்து வந்தார்.
பிறகு தன்னுடைய அசாத்திய நகைச்சுவை நடிப்பால் குழந்தைகளையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். இன்றைய நவீன கால கட்டத்தில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உந்து சக்தியாக இருப்பவரும் வடிவேலுதான்.
வடிவேலு எந்தளவுக்கு உயர்ந்துள்ளாரோ அந்தளவிற்கு அகம் பாவம் பிடித்தவர் என அவரோடு நடிக்கும் துணை நடிகர்கள் கூறியுள்ளனர். தன்னோடு எப்பேர்ப்பட்ட கதாநாயகர்கள் நடித்தாலும் தன்னுடைய காட்சி மட்டுமே சிறப்பாக வரவேண்டும் என படத்தின் இயக்குனருக்கு அழுத்தம் தருவாதாக மற்ற நடிகர்கள் இன்றளவும் கூறி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் முதலில் வடிவேலு நடிக்க இருந்த நிலையில் அவருடைய அழுத்தத்தை தாங்க முடியாமல் இயக்குனர் சூரஜ் படத்தின் கதாநாயகனான தனுஷிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து வடிவேலு விடம் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் என்று கூறியதும் கோபம் அடைந்த வடிவேல் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கடுத்து தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விவேக்கை நடிக்க வைத்தனர்.
வடிவேலுவின் இந்த குணத்தை அறிந்திராத இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதியை வைத்து இயக்கிய மாமன்னன் படத்தில் ஒரு கோடி சம்பளத்தில் நடிக்க வைத்தார். இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய போவதாக தனுஷிடம் கூறியுள்ளார். இதனை எதிர் பார்க்காத அவர் வடிவேலுவால் ஏற்கனவே தான் படிக்காதவன் படத்தில் பாதிக்கப்பட்டதை இயக்குனரிடம் கூறவே இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இயக்குனர் மாரி செல்வராஜின் சமரசத்தை ஏற்க மனமில்லாத தனுஷ், வடிவேலு வேண்டவே வேண்டாம் நமக்கு என அடம் பிடித்து வருவதாகவும். இதனால் மாரி செல்வராஜ் தான் என்ன செய்வது என்று புரியாமல் இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Exit mobile version