Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷ் & செல்வராகவனின் நானே வருவேன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் & செல்வராகவனின் நானே வருவேன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் ரிலீஸனது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. அதோடு படமும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை.

த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவரும் என்பதால் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் ஆச்சர்யப்படும் வகையில் படத்துக்காக படக்குழுவினர் எந்தவொரு ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என விளம்பரம் செய்த தயாரிப்பாளர் தாணு, பத்திரிக்கையில் தஞ்சாவூரில் உள்ள ஒரே திரையரங்கில் மட்டும் படத்தின் தயாரிப்பாளர் பங்காக 50 லட்சம் வரும் என்று விளம்பரப்படுத்தினார். அப்போது இது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. மேலும் படம் ரிலீஸான சில நாட்களில் இயக்குனர் செல்வராகவனுக்கு ஆளுயர ராட்சச மாலை போட்டு அதையும் விளம்பரப்படுத்தினார். ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்று திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்களே கூறினர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியிலாவது படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Exit mobile version