Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

#image_title

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!
நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக இசைஞானி இளையராஜா அவர்களில் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் மூழ்கி உள்ளனர்.
உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கின்றார். இவருடைய இசைக்கு பல சினிமா பிரபலங்கள் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இசை மட்டுமில்லாமல் அரசியலில் தன்னுடைய சமரசமில்லா கருத்துக்களால் சமூக வலைதளத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நபராக இசைஞானி இளையராஜா அவர்கள் இருக்கின்றார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் அதில் நடிகர் தனுஷ் இளையாராஜாவாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அதன்படி இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை பிரபல இயக்குநர் பால்கி அவர்கள் இயக்கவுள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அதாவது 2024வது ஆண்டு தொடங்கும் என்றும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2025ம் ஆண்டில் முடிந்து அந்த ஆண்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா அவர்களின் கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
Exit mobile version