Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! ஓபிஎஸ் உருக்கம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற குழப்பம் கடந்த ஒரு வார காலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றை தலை முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் வந்து அங்கே முழக்கமிட்டனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்னுடைய உடலில் பெற்றோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அங்கு காவலில் இருந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு எல்லோரையும் அழைத்து சென்று விசாரணை நடத்திய பிறகு திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

இந்தச் சம்பவம் வேதனை தருவதாக உள்ளது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது மாபெரும் மக்கள் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மகளிர் அணியை சார்ந்தவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றனர்.

அப்போது தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியைச் சார்ந்த வரும் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு கேசவன் அவர்கள் தீர்த்து வைக்க முயற்சி செய்ததாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இது போன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதிமுகவில் சர்வாதிகாரம் மற்றும் அராஜகப் போக்கு அதிகரித்திருப்பதாக ஓபிஎஸ் மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை விமர்சனம் செய்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தரப்புக்கிடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற சூழ்நிலையில், அந்த கட்சியின் பொதுக்குழு நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version