அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

0
204

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தமிழ் நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளை விட பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாசின் தொகுதியான தருமபுரி தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சாரத்தின் போது மட்டுமல்லாமல் வாக்கு என்ணிக்கையின் போதும் கடைசி வரை பரபரப்பாகவே வைத்திருந்தது.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை ஆனால் எக்காரணம் கொண்டும் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று விட கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். அதற்கு காரணம் கடந்த காலங்களில் அன்புமணி ராமதாஸ் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததை விட திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்தது தான் அதிகம், இத்துடன் விட்டு விடாமல் தமிழக நலன் குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது.குறிப்பாக திமுக ஆட்சியை இழந்ததற்கு பாமகவே முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். கடந்த தேர்தலில் தனித்து நின்று தொல்லை கொடுத்த பாமக இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் திமுகவிற்கு எதிரான அணியை பலமடைய செய்தது.

இதைக்கண்டு விரக்தியான திமுக தலைவர் ஸ்டாலின் பாமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைய வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டார்.குறிப்பாக தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற கூடாது என கூறியிருக்கிறார். இதற்காக திமுகவினரும் திமுக ஆதரவு பெற்ற ஊடகங்களும் பாஜக அதிமுகவை விட பாமகவையும் அன்புமணி ராமதாஸையும் அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்தன.

இதையெல்லாம் ஆதரிக்கும் விதமாக தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் செந்தில்குமார் பல்வேறு விமர்சனங்களை தனது பிரச்சாரத்தின் போது முன்வைத்தார். அதில் அன்புமணி ராமதாஸ் சொந்த ஊர் திண்டிவனம் என்றும் அங்கு போட்டியிடாமல் தருமபுரியில் போட்டியிட்டு அந்த தொகுதி மக்களை ஏமாற்றுவதாகவும்,அவர் பதவியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் தொகுதி பக்கமே வரவில்லை என்றும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

இது மட்டுமல்லாமல் பாமக சாதி அரசியல் செய்கிறது என்று விமர்சனம் செய்த செந்தில்குமார் நானும் அன்புமணி ராமதாஸின் சமுதாயத்தை சேர்ந்தவன் தான் என சாதி ரீதியாக பேசி வாக்குகளை கவர சாதி அரசியல் செய்ய ஆரம்பித்தார்.மேலும் ஊடகங்களும் நடாளமன்றத்தில் அன்புமணி ராமதாஸின் வருகை பதிவேடு குறைவு என்பதை தொடர்ந்து பதிவு செய்தனர். இது போன்ற திமுகவின் திட்டமிட்ட பிரச்சாரங்களால் தருமபுரியில் திமுகவின் செந்தில்குமார் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவின் எம்.பி.செந்தில்குமாரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்ன செய்ய போகிறீர்கள்? என்றும் இதுவே அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகி நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருப்பார் என்றும் இணையதளவாசிகள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த எம்.பி.செந்தில்குமார் இப்போதும் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா சீட்டின் மூலமாக அமைச்சர் ஆகி திட்டங்களை கொண்டு வரலாம் என பதிலளித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்புமணி ராமதாஸ் எதுவும் செய்ய மாட்டார் என்று விமர்சனம் செய்தவர் தற்போது அன்புமணி ராமதாஸ் அமைச்சராகி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வரலாம் என்று கூறியது மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளானது.அன்புமணி ராமதாஸ் தனது தொகுதியில் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அவரை எதிர்த்து வெற்றி பெற்றவரே ஏற்று கொண்டார் என்பதை வைத்து திமுகவின் பொய் பிரச்சாரத்தை விமர்சனம் செய்தனர்.

மேலும் இது குறித்த செய்தியை படிக்க: தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இந்நிலையில் இதையெல்லாம் மீண்டும் உறுதி செய்யும் விதமாக தருமபுரி எம்.பி.செந்தில்குமாரின் செயல்பாடு அமைந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த போது அவரால் கொண்டு வரப்பட்ட மொரப்பூர்-தருமபுரி இடையிலான தொடர்வண்டி பாதை திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்வண்டி துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து தருமபுரி எம்.பி.செந்தில்குமார் பேசியுள்ளார்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தொகுதி பக்கமே வரவில்லை என்று பிரச்சாரம் செய்த திமுகவின் செந்தில்குமார் அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரை சந்தித்தது நகைச்சுவையாக உள்ளது என்றும், மேலும் அன்புமணி ராமதாஸை வைத்து விளம்பரம் தேடி கொள்ளாமல் சொந்தமாக எதாவது திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே : பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்