தர்மபுரி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், கிணற்றில் இருந்த 4 அடி நீரால் உயிர்பிழித்து, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாப்பிரெட்டி அடுத்த கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பவித்ரன். இன்று அதிகாலை இந்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 120 அடி ஆழம் கொண்ட விவசாய கணக்கில் தவறி விழுந்துள்ளார்.
இந்த கிணற்றில் நான்கு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து அபாய குரல் எழுப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை பத்திரமாக கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் பள்ளி மாணவர்கள் நீர் நிலைகளில் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் அலட்சியமே/
பள்ளி மாணவர்களுக்கு இது கொடை விடுமுறை காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால், ஆறு, கிணறு போன்ற பகுதிகளுக்கு சிறுவர்களை அனுப்பாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.