Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் அர்ஜுனின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகம்

Arjun-News4 Tamil Online Tamil News1

Arjun-News4 Tamil Online Tamil News1

கன்னட திரையுலகில் நடிகர் துருவா சர்ஜா மிகவும் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார்.இவர் மறைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘அதூரி’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தவர், தற்போது ‘பொகுரு’ படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்காக தயாராகவுள்ளது

இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரின் மனைவி ப்ரேரானா ஆகிய இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் துருவா சர்ஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் இவருடைய உறவினரான சிரஞ்சீவி சர்ஜா என்பவர் இறந்தார்.இவர்கள் இருவருமே நடிகர் அர்ஜுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version