Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

#image_title

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய் இந்த உலகினையே உலுக்கிக்கொண்டு வருகிறது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33% பேருக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது என்றால், நம் உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது இந்நோய் ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலினில் சிக்கல் இருப்பதாக ஒருவர் உணரும்போது உடல், ரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் சேர்ந்து விடும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

நீரிழிவு நோயில் டைப் 2 உள்ளது. இது வயதானவர்களிடையே அதிகம் பாதிக்கிறது. இந்நோயால், ரத்தச் சர்க்கரைக் குறைவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட  சிக்கலைகளை ஏற்படுத்திவிடும். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் எப்படி கண்டுபிடிப்பது என்றால், ஒருவருடைய உடலில் காயங்கள் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டால், அவை  குணமடைகிறதா என்று கவனிக்க வேண்டும். ஒருவருக்கு கால்களில் சேற்றுப்புண்கள் அல்லது தோல் தொற்று விரைவில் குணமடையாமல் இருக்கும். பெண்களுக்கு நீரிழிவு இருந்தால் சிறுநீர்ப்பை தொற்று அல்லது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படும்.

கவலை வேண்டாம். இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சில மூலிகை பொருட்களை சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து மீள முடியும்.

திரிபலா

சர்க்கரை நோயை திரிபலா குணப்படுத்தும். திரிபலாவை நாம் சாப்பிட்டு வந்தால், அவை நம் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். மேலும், அவை கணயத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தும். இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும்.

வேப்பிலை

வேப்பிலை பல நோய்க்கு மருந்தாக அமைகிறது. வேப்பிலையில் பல விதமான நன்மை உள்ளது. வேப்ப இலையை சுத்தம் செய்து அவற்றை நசுக்கி தண்ணீர் கொதிக்க வைத்து அந்த சாற்றை குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்யில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நெல்லிக்காயை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம். நெல்லிக்காயை சாற்றை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நெல்லிக்காயை நேரடியாகவோ அல்லது ஜூஸாகவோ தினமும் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

பாகற்காய்

பாகற்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கையாகவே பாகற்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருக்கும். ஆனால், பாகற்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த அளவை குறைக்க உதவி செய்யும். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு சிறந்த மருந்தாகும்.

Exit mobile version