தற்போதைய காலகட்டத்தில் உண்ணும் உணவு மற்றும் பின்பற்றும் வாழ்க்கை முறையாலும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உறுதியானால் நீங்கள் உங்கள் உணவுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.அரிசி உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்.இதோடு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)இலவங்கப்பட்டை – ஒன்று
செய்முறை:
சர்க்கரை நோயை அடித்து விரட்டும் வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை.இதை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பதை இதில் பார்ப்போம்.
முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை சேர்த்து வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.இரண்டு பொருட்களும் கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.தண்ணீர் சூடானதும் அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த நீரில் வறுத்த வெந்தயம் மற்றும் பட்டை துண்டு சேர்த்து நாள் முழுவதும் ஊறவிடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.
இப்படி தினமும் பருகி வந்தால் சர்க்கரை நோய்க்கு மெல்ல மெல்ல குணமாகும்.சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி இந்த இரண்டு பொருட்களை வைத்தே குணமாக்கி கொள்ளலாம்.