சர்க்கரை நோயாளிகளே இந்த இனிப்பை எவ்வளவு சாப்பிட்டாழும் சுகர் லெவல் கன்ட்ரோலாக இருக்கும்!! இது என்னவென்று பாருங்கள்!!
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.இதனால் இனிப்பு சாப்பிட முடியாமல் பலர் ஏங்கி கொண்டிருப்பார். அவர்களுக்கான இனிப்பு தான் இந்த சுரைக்காய் ஹல்வா.
தேவையான பொருட்கள்:-
1)சுரைக்காய்
2)நாட்டு சர்க்கரை
3)நெய்
4)முந்திரி பருப்பு(நறுக்கியது)
5)காய்ச்சாத பால்
6)பாதாம் பருப்பு(நறுக்கியது)
செய்முறை:-
ஒரு கப் அளவு சுரைக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த சுரைக்காய் விழுதை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.பிறகு அதில் காய்ச்சாத பால் ஒரு கப் அளவு ஊற்றி கிளறி விடவும்.
பிறகு அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்.சுரைக்காய் நெய்யில் வதங்கி சுண்டி வரும் வரை வதக்கி எடுக்கவும்.
மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை வெந்து கொண்டிருக்கும் சுரைக்காய் ஹல்வாவில் போட்டு கலந்து விடவும்.அவ்வளவு தான் வாயில் வைத்ததும் கரையும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் ஹல்வா தயார்.