கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

0
131

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கொரோணா பரிசோதனையை மேற்கொண்ட பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நலமுடன் இருக்கும் நிலையில் உள்ள அவருக்கு காது பகுதியில் ஏதோ ஒரு பூஞ்சை உருவாகி இருந்தது தெரியவந்தது.

உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேலும் கூடுதலான சிகிச்சை தேவைப்படுகிறது என கூறி மைசூரில் உள்ள அரசு காது மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த நபரை மருத்துவர்கள் பரிசோதித்து உள்ளனர்.

அப்பொழுது தான் அவருக்கு தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு கருப்பு மஞ்சள் போன்ற பல பூஞ்சைகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் மைசூரில் உள்ள காது மூக்கு பிரிவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் மருத்துவர்கள் இதனால் அச்சப்படத் தேவையில்லை என கூறி வருகின்றனர்.

இது ஒரு தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் இது பரவக்கூடிய நோய் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். வேறு எந்த வகையிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது அதனால் மக்கள் யாரும் பயப்படாமல் இருக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.