Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வைரக்கற்கள் ஒட்டப்பட்ட முக கவசம்;விலை எவ்வளவு தெரியுமா?

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட முககவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளதால் முகக்கவசங்களை அணிய கோரி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முகக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களை கவர பல்வேறு விதமான முக கவசங்களை தயாரித்து வருகின்றனர்.மேலும் திருமணங்களிலும் மணமகன்,மணமகளுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்பதால் அவர்களுக்கும் வித்தியாசமான முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைரக்கற்கள் ஒட்டப்பட்ட முகக்கவசங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த முகக்கவசங்கள் திருமணத்திற்காக தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த முக கவசம் ரூ.1லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என நகை கடை உரிமையாளர் கூறியுள்ளார்.மேலும் திருமண ஜோடிகளுக்கு தேவையான டிசைன்களில் முக கவசம் வடிவமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மாஸ்க் அடைந்தவரின் புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து தற்பொழுது இந்த வைரக்கற்கள் ஒட்டப்பட்ட மாஸ்கின் வீடியோ வைரலாகி வருகிறது

Exit mobile version