Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!!

Did actor Rajini's daughters steal from the house? Film industry in shock

Did actor Rajini's daughters steal from the house? Film industry in shock

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!!

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் பணம், சுமார் 60 சவரன் தங்க நகைகள், வைரங்கள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைகார பெண்ணை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியது.

வேலைகாரப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நீண்ட நாட்களாக சிறிது சிறிதாக பணம் மற்றும் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அந்த பணம் நகைகளை விற்று வேலைகாரப் பெண் தனது கணவருடைய வங்கிக் கணக்கில் வைத்தது தெரியவந்தது.

மேலும் திருடிய நகை, பணங்களை வைத்து பிளாட் வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுப்போன நகை, பணங்களை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம், இன்னும் தனியாத நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா  தனது கார் சாவி தொலைந்து போனதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்லும் வழியில் தனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவி மாயமாகிவிட்டது என்று புகார் கூறியுள்ளார்.

இது குறித்து புகார் மனுவை பெற்றுக்கொண்ட தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், காரின் சாவி மாயமானது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version