பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்!

0
109
Did Bin Laden do this? Did you see? - Taliban!

பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்!

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தினார். இதை யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.மேலும் இதில் அநியாயமாக பல அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிக்கப் பட்டது. நான்கு பயணிகளின் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, அவைகளை வைத்து உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை இடம், வயல் வெளி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப் பட்டது.

இந்த தாக்குதலில் மட்டும் மொத்தம் 2996 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2977 பேர் பொதுமக்கள், 19 பேர் அல்-கொய்தா பயங்கரவாதிகளும் அடக்கம். இந்த தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தா அமைப்பு மற்றும் அதன் தலைவரான ஒசாமா பின் லேடனை அழிக்கும் நோக்கத்தோடு, அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர்.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், அமெரிக்க படைகளால் பின்லேடன் கொல்லப் பட்டான். அதன் பின்னரும் கூட தலீபான் தலைவர்களுடனான மோதலைத் தொடர்ந்து, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் 20 ஆண்டுகள் கடந்து, தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறி வருகிறது. மேலும் முழு நாட்டையும் தலிபான்கள் முழுவதும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாகித் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது பேசிய முஜாகித் அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில், ஒசாமா பின்லேடனின் பங்கு ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.

ஆகையால் அந்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அதை நியாயப்படுத்த முடியாது. மேலும் அதேபோல் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானிலும் மண்ணை பயன்படுத்துவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.