Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகையிடம் அத்து மீறினாரா போனி கபூர்?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

Did Boney Kapoor break up with famous actress?? Roasting Netizens!!!

Did Boney Kapoor break up with famous actress?? Roasting Netizens!!!

பிரபல நடிகையிடம் அத்து மீறினாரா போனி கபூர்?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம் மூலம் முத்தழகாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை பிரியாமணி. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். இருப்பினும் பருத்திவீரன் படம் அளவிற்கு இவருக்கு எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

அதனால் மார்க்கெட் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிரியாமணி திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை.ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் பிரியாமணி நடித்துள்ள படம் தான் மைடான்.இந்த படம் ரம்ஜானை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.எனவே நேற்று இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஷோ மும்பையில் நடைபெற்றது.இதில் நடிகை பிரியாமணி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது போனி கபூர் நடிகை பிரியாமணியின் இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த செயலை நடிகை பிரியாமணி விரும்பவில்லை என்பது அவரின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது.ஒரு நடிகையின் அனுமதி இல்லாமல் எப்படி அவரை தவறாக தொடலாம் என நெட்டிசன்கள் பலரும் போனி கபூரை சாடி வருகிறார்கள்.

தற்போது இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த படம் குறித்த மற்றொரு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது பிரியாமணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை கீர்த்தி சுரேஷாம்.ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறவே அந்த கேரக்டரில் பிரியாமணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version