சோகத்தில் முடிந்ததா ? கடைசி உலகப் போர்!!

0
151
Did it end in tragedy? Last World War!!

ஹிப்ஹாப் ஆதி தயாரித்து நடித்துள்ள படம்தான் கடைசி உலகப் போர். இந்த படம் தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி செய்துள்ளது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

கடைசி உலகப் போர் படம் வெற்றி படமாக வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தினை தயாரிக்க ஹிப்ஹாப் ஆதி முடிவு செய்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் திரையரங்குகளில் ஓடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மேலும் இவர் இசையமைத்து சம்பாதித்த பணம், இசை கச்சேரிகள் நடத்தி சம்பாதித்த பணம் என மொத்த பணத்தையும் முதலீடு செய்து கடைசி உலகப் போர் படத்தை ஹிப் ஆப் ஆதி தயாரித்திருந்தார். அதனால் இதற்கு அடுத்த தயாரிப்பதற்காக இருந்த படம் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் சென்னை, ஆம்பள, அரண்மனை 2, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. இந்த படங்களில் ஒரு பாடல் காட்சியிலும் ஹிப் ஆப் தமிழா ஆதி தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். மேலும் இவர் பல இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார்.

தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன், பிடி சார் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார். நடிப்பை தொடர்ந்து இசையிலும் தயாரிப்பிலும் ஹிப்பாப் ஆதி இறங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் தயாரிப்பு இவருக்கு பெரிதளவும் கை கொடுக்கவில்லை என்பது கடைசி உலகப் போரின் மூலம் தெளிவாகி இருக்கிறது.