Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்ஜிஆர் சிவாஜிக்கு வர வேண்டிய பட்டங்களை தடுத்தாரா?

#image_title

அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி என்றாலே போட்டிதான். இந்த படம் வெளியாகி இத்தனை நாள் ஓடுகிறது. இந்த படத்தை இப்படி இயக்க வேண்டும் . இந்த படத்திற்கு இப்படி பாடல்கள் வேண்டும். சண்டைக் காட்சிகள் வேண்டும் என்று பல்வேறு விதமான போட்டிகள் திரையுலகில் இருந்து தான் வருகின்றது.

 

இப்பொழுது ரஜினி கமல் ,விஜய் அஜித் என்று வரிசைகள் உள்ளன. சிவாஜிக்கு என்று தனியாக ஒரு பேன் பேஸ் உள்ளது அதேபோல் எம்ஜிஆருக்கு தனியான ரசிகர்கள் உள்ளார்கள்.

 

எம்ஜிஆரின் பாணி மிகவும் வேறுபட்டது. இவரது பாணியில் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும். மக்களுக்காக போராடுபவராக இருப்பார். ஒரு எதிரிகளை எதிர்கொண்டு போராடி மக்களை காப்பாற்றுவார். அந்த மாதிரி படங்களை தான் எம்ஜிஆர் எடுத்திருக்கிறார். ஆனால் சிவாஜியோ குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை என்ன? குடும்ப சம்பந்தமான படங்களை அவர் எடுப்பார். வரலாற்று சரித்திரத்தை படமாக எடுத்த நடிப்பார். அவர் நடித்த பின் தான், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் யார் கப்பலோட்டிய தமிழன் என்றார் யார் ? பகத்சிங் என்றால் யார்? என்று நமக்கு தெரிய வந்தது.

 

இருவருக்கும் பாணி வேறு விதமாகவே இருந்தது. இன்று உலாவி வரும் பிரச்சனை என்னவென்றால் எம்ஜிஆர் சிவாஜிக்கு வரும் பட்டங்களை தடுத்தாரா என்று கேட்டிருக்கிறார்கள் கண்டிப்பாக இல்லை.

 

ஏனென்றால் சிவாஜி திரைத்துறைக்கு வருவதற்கு முன்னே இருவரும் அண்ணன் தம்பிகளாக பழகி வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது எப்படி அவர் தடுத்திருக்க முடியும். என்றுதான் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.

 

அப்படி எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது, வெளிநாட்டு விருந்தாளிகள் எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்று வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் நடிப்புத் திறனையும் எப்படி எல்லாம் நடித்தார்கள் என்று அவரை பாராட்டிவதற்காக வந்திருந்தார்கள்.

 

வந்த விருந்தினர்களுக்கு “தில்லானா மோகனாம்பாள்” படத்தை போட்டு காட்டியுள்ளார்கள்.

எம்ஜிஆரை பார்த்து கட்சியினர்கள் கேட்கிறார்களாம் ஏன் உங்கள் படத்தை போட்டு காட்ட வேண்டியது தானே? எதற்கு சிவாஜியின் படத்தை போட்டீர்கள்? என்று கேட்டார்களாம்.

 

அதற்கு எம்ஜிஆர் சொன்னாராம் ” தம்பியின் படத்தை பார்த்தால் கலை பாரம்பரியம் இந்தியாவில் என்னது? என்று தெரிந்து கொள்வார்கள். அதனால் தான் தம்பியின் படத்தை போட்டு காட்டினேன் என்று எம்ஜிஆர் சொன்னார்.

 

தன்னைவிட நடிப்பில் உயர்ந்தவன் என்று எம்ஜிஆரை சுட்டிக்காட்டிய பின் அவர் எப்படி அந்த பட்டத்தை தடுத்திருப்பார்.

Exit mobile version