நன்றி மறந்தாரா உதயநிதி ஸ்டாலின்? கிழிந்தது திமுகவின் முகத்திரை!

0
138

திமுக எப்போதும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்படும் ஒரு கட்சி என்ற ஒரு பின்பம் இருந்து வருகிறது.

அதேநேரம் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் திமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்படும் அது பல இடங்களில் கண்கூடாக தெரிந்திருக்கிறது.

அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் சிறுபான்மையினருக்கு அரணாக விளங்க கூடிய கட்சி திமுக தான் என்று பல இடங்களில் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இவை அனைத்தும் வெளி வேஷம் தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் தேவைப்படும் ஓட்டுக்காக இத்தனை நாள் திமுக போட்ட வேஷம் தற்போது கலைந்திருக்கிறது.

அதாவது சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சட்டசபை தொகுதியில் ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அந்த விதத்தில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 62வது -வார்டு 114 வது வார்டு 115 மற்றும் 116 119 120 உள்ளிட்ட மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையென்று சொல்லப்படுகிறது.

ஆகவே உதயநிதி ஸ்டாலினை பதவியில் அமர வைத்து அழகு பார்த்த அந்த தொகுதியின் முஸ்லிம்களுக்கு வார்டு கவுன்சிலராக வருவதற்கு தகுதியில்லையா என முஸ்லிம்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதோடு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விபரம் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்பே கிடையாது. ஆகவே முஸ்லிம்களை உதயநிதிஸ்டாலின் புறக்கணித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். இப்படி முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு வேதனை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.